Home One Line P2 கொவிட்19: இந்தியாவில் ஒரே நாளில் 57,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கொவிட்19: இந்தியாவில் ஒரே நாளில் 57,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

561
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்19 பாதிப்பின் எண்ணிக்கை 57,118- ஆக பதிவாகியுள்ளது.

இதனிடையே, அந்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,695,988- ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், ஒரே நாளில் 764 பேர் இந்த தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 36,511- ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 15 இலட்சத்தை எட்டிய 3 நாட்களில் மேலும், ஒரு இலட்சம் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு எண்ணிக்கை மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் அதிகமான பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.