கோத்தா கினபாலு: வரவிருக்கும் சபா மாநிலத் தேர்தலில் மொத்தம் 73 சட்டமன்றங்களில் தேர்தல் நடைபெறும். இதற்கு முன்னர் 60 சட்டமன்றங்கள் இருந்தை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
“எழுபத்து மூன்று சட்டமன்றங்கள் போட்டியிடப்படும்” என்று சபா தேர்தல் ஆணைய இயக்குனர் ரோஹிமான் ரஹியா கூறினார்.
வியாழக்கிழமை (ஜூலை 30), முதல்வர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் சபா மாநில சட்டமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார். அதன் பிறகு, 60 நாட்களுக்குள் மாநிலத் தேர்தல் நடைபெறும்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், சபா மாநில சட்டமன்ற எண்ணிக்கையை 60 முதல் 73- ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதாவுக்கு மக்களவையில் இருந்த 158 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சபா நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஆதரவளித்தனர்.
அண்மையில், முன்னாள் முதல்வர் டான்ஸ்ரீ மூசா அமான், தமக்கு போதுமான ஆதரவு இருப்பதாகக் கூறி மாநில ஆளுநரைச் சந்தித்து புதிய முதல்வராக பதவி ஏற்க இருப்பதாகக் கூறியிருந்தார்.
அதனை அடுத்து, மறுநாள் காலையில் ஷாபி அப்டால் ஆளுநரைச் சந்தித்து, சட்டமன்றதைக் கலைக்க அனுமதியைப் பெற்றார். மாலையில், மூசா அமான் மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரைச் சந்திக்க முயன்றபோது, அவர்களுக்கு அமைதி அளிக்கப்படவில்லை.