Home One Line P1 சபா தேர்தல்: பிகேஆர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

சபா தேர்தல்: பிகேஆர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

501
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் சபா பிகேஆர் அதன் வேட்பாளர்கள், தொகுதிகளின் பட்டியல் குறித்து முடிவு செய்யும் என்று மாநில பிகேஆர் தலைவர் டத்தோ கிறிஸ்டினா லியூ தெரிவித்தார்.

இந்த பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் வாரிசான் தலைவரான முதலமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டாலிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.

“நாங்கள் முதலில் சபா தேர்தல் பணியகக் கூட்டத்தை நடத்துவோம். அதன் பிறகு முதலமைச்சருக்கு வேட்பாளர்களின் பெயர்களைச் சமர்ப்பிக்கும் முன் தொகுதி ஒதுக்கீடு குறித்து முடிவு செய்வோம்.

#TamilSchoolmychoice

“பிகேஆரின் தரப்பில், இந்த விஷயத்தை இறுதி செய்வதற்கு முன், முதலில் எங்கள் தலைவர்களிடையே விவாதிப்போம். ” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

திடீர் தேர்தலில் பிகேஆர் புதிய முகங்களை களமிறக்குமா என்று கேட்கப்பட்டதற்கு, அடுத்த சில நாட்களில் மாநிலம் முழுவதும் இருந்து வேட்புமனுக்களை கட்சி எதிர்பார்க்கும் என்று அவர் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில் பிகேஆர் எட்டு இடங்களுக்கு போட்டியிட்டு, இனானாம் மற்றும் ஆபி-ஆபி ஆகிய இரண்டு இடங்களை வென்றது. இந்த முறை மேலும் மூன்று இடங்களை பிகேஆர் வெல்லும் என்று லியூ நம்புகிறார்.

கடந்த வியாழக்கிழமை, முகமட் ஷாபி மாநில சட்டமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமானின் பக்கம் இனானாம் மாநில சட்டமன்ற உறுப்பினர் கென்னி சுவாவின் தாவல் குறித்து கேட்டதற்கு, லியூ மிகவும் ஏமாற்றமடைந்ததாகவும், ஆனால், அவரது நடவடிக்கை பிகேஆரில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் கூறினார்.

முன்னாள் பிகேஆர் துணைத் தலைவரான சுவாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டாம் என்று சபா பிகேஆர் துணைத் தலைவர் முஸ்தபா சக்முட் கட்சி உறுப்பினர்களுக்கு நினைவுபடுத்தினார்.