பாதுகாப்பு காவலர் தாக்கப்பட்ட விவகாரம்- பாகிஸ்தானிய நபர் தேடப்படுகிறார்!

    403
    0
    SHARE
    Ad

    கோலாலம்பூர்: இங்குள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நேபாள பாதுகாப்பு காவலர் ஒருவர் தடியால் தாக்கப்படும் காணொளி ஒன்று பரவலானதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை அறிக்கையை திறந்துள்ளனர்.

    ஜூலை 7-ஆம் தேதி வாங்சா மாஜூவில் ஜாலான் மெட்ராசாவில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டு கார் நிறுத்தும் இடத்தில் இந்த சம்பவம் நடந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டதாக வாங்சா மாஜு மாவட்ட காவல் துறைத் தலைவர் ராஜாப் அஹாட் இஸ்மாயில் தெரிவித்தார்.

    “இந்த சம்பவத்தில் சந்தேக நபர், ஒரு பாகிஸ்தான் நாட்டவர் ஆவார். அங்கு அவரும், நேபாள ஆடவரும் அக்கட்டிடத்தில் பாதுகாப்பு காவலராக பணிபுரிந்ததாக நம்பப்படுகிறது.

    #TamilSchoolmychoice

    “தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324- இன் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணைக்கு உதவ உடனடியாக முன்வருமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை நாங்கள் நாடுகிறோம், ”என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இப்போது வரை, பாதிக்கப்பட்டவர் இன்னும் காவல் துறையில் புகார் அளிக்கவில்லை.

    சம்பவம் தொடர்பான தகவல்கள் உள்ளவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஷாருல் அஸ்வான் ஷாரோம் (016-2014334) அல்லது புலனாய்வு அதிகாரி ஸ்டீபன் கணேசன் (016-3767390) அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    நேற்று பரவலாகப் பகிரப்பட்ட 44 விநாடி காணொளியில், பாதுகாப்பு காவலர் சீருடையில் வெளிநாட்டவர் என்று நம்பப்படும் ஒரு நபர், மற்றொரு நபரை அறைந்து, அடிப்பது பதிவாகி உள்ளது.