Home நாடு 1எம்டிபி அறிக்கை திருத்த வழக்கு : நஜிப், அருள் கந்தா விடுதலை

1எம்டிபி அறிக்கை திருத்த வழக்கு : நஜிப், அருள் கந்தா விடுதலை

1210
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரும், 1எம்டிபியின் தலைவருமான டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் – 1எம்டிபியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அருள் கந்தா கந்தசாமி, இருவர் மீதும் 1எம்டிபியின் கணக்கறிக்கையை மாற்றி அமைத்ததற்காக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.

இன்று இந்த வழக்கிலிருந்து இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிரான வழக்கில் போதிய சாட்சியங்களை முன்வைக்க அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தவறி விட்டனர் என நீதிபதி முகமட் சைனி மஸ்லான் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.