மார்ச் 3 வெள்ளிக்கிழமை முதல் ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் முதல் ஒளிபரப்பாகிவரும் ‘எங்க வீட்டு செஃப்’ எனும் உள்ளூர் தமிழ் சமையல் நிகழ்ச்சியைக் கண்டு மகிழுங்கள். முதல் நிகழ்ச்சியைத் தவறவிட்டவர் ஆஸ்ட்ரோ ஒன் டிமாண்டில் கண்டி களிக்கலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை, மார்ச் 3, இரவு 7.30 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 202) அலைவரிசையில் முதல் ஒளிபரப்பு கண்டது, பாரம்பரிய இந்தியச் சமையல் – இனிப்பு வகைகளைச் சித்திரிக்கும் ‘எங்க வீட்டு செஃப்’ எனும் உள்ளூர் தமிழ் சமையல் நிகழ்ச்சி.
தொடர்ந்து வாரந்தோறும் இடம் பெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியை வானவில் 201 அலைவரிசையிலும் ஆஸ்ட்ரோ கோ – ஆன் டிமாண்ட் வாயிலாகவும் கண்டு களிக்கலாம்.
25 அத்தியாயங்களைக் கொண்ட சமையல் நிகழ்ச்சியில் டேனேஸ் குமார், மூன் நிலா, தேவகுரு, புனிதா ராஜா, ஸ்ரீ குமரன் போன்ற பல புகழ்பெற்ற உள்ளூர் பிரபலங்கள் இடம்பெறுவர். இந்த திறமையாளர்கள் தங்களது தாய், மாமியார், சகோதரி மற்றும் அவர்களின் இதயங்களுக்கு நெருக்கமானப் பிற நபர்களுடன் இடம்பெறுவர். தங்களது தனித்துவமானச் சமையல் பாணியைப் பயன்படுத்திச் சுவையான உணவுகளைச் சமைப்பர். இரசிகர்கள் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான சமையல் குறிப்புகளையும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கலாம்.
எங்க வீட்டு செஃப்-இல், விருந்தினர்கள் ‘பெர்ன்லீஃப் பால்’ (Fernleaf) பயன்படுத்திப் பாரம்பரிய இந்திய உணவுகளைச் சமைப்பர். அதைத் தொடர்ந்து அவர்களுக்குப் பிடித்த பாரம்பரிய இந்திய உணவு வகைகளையும் சமைப்பர். உள்ளூர் இனிப்புகளையும் தயார் செய்வர்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் டிவி, ஆஸ்ட்ரோ கோ – ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிப்பரப்புக் காணும் புதிய அத்தியாயங்களைக் கண்டு மகிழுங்கள்.
மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.