Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : ‘மன்மத புல்லட் ரீலோடட்’ தொடர் மார்ச் 8 முதல் ஆஸ்ட்ரோ விண்மீண் (அலைவரிசை...

ஆஸ்ட்ரோ : ‘மன்மத புல்லட் ரீலோடட்’ தொடர் மார்ச் 8 முதல் ஆஸ்ட்ரோ விண்மீண் (அலைவரிசை 202) முதல் ஒளிபரப்பு

477
0
SHARE
Ad

மார்ச் 8 முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல்மன்மத புல்லட் ரீலோடட் தொடர் முதல் ஒளிபரப்புக் காணுகிறது

 மார்ச் 8, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ – ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும்​​ மன்மத புல்லட் ரீலோடட் எனும் பிரபலமான உள்ளூர் தமிழ் அறிவியல் புனைகதை நாடகத் தொடரின் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சீசன் 2-ஐ ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்க்கலாம்.

ஆஸ்ட்ரோவின் இந்திய அலைவரிசை வணிகப் பிரிவு உதவித் துணைத் தலைவர் (ஆஸ்ட்ரோ விண்மீன்), மகேஸ்வரன் பாலக்கிருஷ்ணன் கூறுகையில், “சீசன் 1-இன் பிரபலத்தைத் தொடர்ந்து எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மன்மத புல்லட் ரீலோடட் தொடரை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். முதல் சீசனின் பரிச்சயமான முகங்களுடன் புதிய கதாப்பாத்திரங்களை இந்தப் புதிய சீசன் அறிமுகப்படுத்துகிறது. வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்க்கக்கூடிய அற்புதமானக் கதைத் திருப்பங்களை இது வழங்குகிறது. ஆக்கப்பூர்வமானப், புதிய வகை உள்ளூர் உள்ளடக்கத்தில் நாங்கள் தொடர்ந்து முதன்மை வகிக்கிறோம். மேலும், இந்தப் பயணத்தில் பல்வேறு உள்ளூர் திறமையாளர்கள் மற்றும் குழுக்களுடன் இணைந்துப் பணியாற்றுவதை ஒரு பாக்கியமாக நாங்கள் கருதுகிறோம். வாடிக்கையாளர்கள் இந்தப் புதிய சீசனைக் கண்டு மகிழ்வார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.

பிரபல உள்ளூர் திரைப்பட இயக்குநர் மார்ட்டின் ஆர். சந்திரன் இயக்கிய மற்றும் எலினா சுமித்ரா தோமஸ் தயாரித்த, இந்த 22 அத்தியாயத் தொடரில் தேவகுரு சுப்பையா, செல்லினா ஜெய், இர்பான் சைனி, தாஷா கிருஷ்ணகுமார், ஜெயஸ்ரீ விஜயன், சாந்தினி நாகதுர்கா, ஹூமேஷ் மற்றும் பலர் உள்ளடங்கிய உள்ளூர் திறமையாளர்கள் இடம்பெற்றுள்ளன.

#TamilSchoolmychoice

இளைஞர்கள் சம்பந்தப்பட்ட ஒரு புதிய வழக்கைத் தீர்க்கும் அன்பின் கடவுளான மதனை (தேவகுரு சுப்பையா) மன்மத புல்லட் ரீலோடட் தொடர் சித்திரிக்கிறது. இருப்பினும், முந்தைய நிகழ்வுகளின் பின்விளைவுகள் அதிகச் சவால்களை ஏற்படுத்துகின்றன. மதன் காதல் வயப்படுகையில் கதை மேலும் சுவாரசியமடைகிறது. காஷ் வில்லன்ஸின் கருப்பாடலான ‘மீண்டும் வருவான்’ மற்றும் அமோஸ் பால் மற்றும் நெரோஷன் பாடிய ‘உறுத்துற நீ’ உள்ளிட்டப் பாடல்களை இரசிகர்கள் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202), ஆஸ்ட்ரோ உலகம், யுடியூப் மற்றும் ஸ்பாட்டிஃபை ஆகியவற்றில் கேட்டு இரசிக்கலாம்.

மன்மத புல்லட் ரீலோடட் தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்குத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டுக் களியுங்கள் அல்லது எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள். மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.