Home Photo News துன் ச.சாமிவேலு பிறந்த நாள் – நினைவலைகள் – சரவணன் உரை

துன் ச.சாமிவேலு பிறந்த நாள் – நினைவலைகள் – சரவணன் உரை

834
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி மறைந்த துன் ச.சாமிவேலு அவர்களின் 87-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று புதன்கிழமை மார்ச் 8-ஆம் தேதி “துன் ச.சாமிவேலு நினைவலைகள்” என்ற நிகழ்ச்சி மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சாமிவேலு குறித்த மிக ஆழமான, அற்புதமான நினைவுகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. டான்ஸ்ரீ க.குமரன், டான்ஸ்ரீ ஆர்.நடராஜா, டத்தோ ஆ.சோதிநாதன், ஆகியோர் உள்ளிட்ட பலர் சாமிவேலு குறித்த தங்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் நிறைவுரையாற்றிய டத்தோஸ்ரீ எம்.சரவணன், 15 வயதில் அவரை முதன் முதலில் சந்தித்த சம்பவத்தையும் அதனைத் தொடர்ந்து அவருக்கும் தனக்கும் ஏற்பட்ட நீண்ட கால அரசியல் பயணத்தையும் சுவாரசியமாக விவரித்தார்.

#TamilSchoolmychoice

“தமிழ்ப்பள்ளி சார்ந்து, கல்வி சார்ந்து, இலக்கியம் சார்ந்து, சமயம் சார்ந்து, அரசியல் சார்ந்து, அத்தனை துறை சார்ந்தும் துன் உடனான நினைவலைகளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நம்மோடு பகிர்ந்து கொண்டார்கள். இப்படி எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பவர் துன் அவர்கள்.
எல்லோரும் இறப்பதுண்டு, எல்லோரும் மறைவதுண்டு, ஆனால் ஒரு சிலர் மட்டுமே எல்லார் மனதிலும் நிறைந்து நின்று காலமாவார்கள். “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” – கனத்த இதயத்துடன் அவரது பிரிவை எண்ணி எண்ணிப் பார்க்கிறோம்” எனவும் நிகழ்ச்சிக்குப் பின்னர் சரவணன் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

துன் சாமிவேலு நினைவலைகள் குறித்த நிகழ்ச்சியின் படக் காட்சிகளை இங்கே காணலாம்:

டான்ஸ்ரீ ஆர்.நடராஜா
டான்ஸ்ரீ க.குமரன்
டத்தோ ஆ.சோதிநாதன்