Home நாடு அனைவருக்கும் கடன் தள்ளுபடி வழங்குவது சிறந்த தீர்வாக இருக்காது!

அனைவருக்கும் கடன் தள்ளுபடி வழங்குவது சிறந்த தீர்வாக இருக்காது!

561
0
SHARE
Ad
நோர் ஷம்சியா முகமட் யூனுஸ்

கோலாலம்பூர்: நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தியதைத் தொடர்ந்து கடன் தள்ளுபடி வழங்குவது என்பது சிறந்த தீர்வாக இருக்காது.

அதற்கு பதிலாக, அவர்கள் கடன்களை செலுத்த வங்கிகளை அணுக வேண்டும் என்று தேசிய வங்கி தெரிவித்துள்ளது.

அதன் ஆளுநர் நோர் ஷம்சியா முகமட் யூனுஸ் கூறுகையில், அனைத்து வங்கிகளிலும் ஏற்கனவே பணம் செலுத்தும் உதவித் திட்டங்கள் உள்ளன என்று கூறினார். இதில் இலக்கு வைக்கப்பட்ட கடன் தள்ளுபடி உள்ளிட்டவை உள்ளன. அவை வேலை இழந்த அல்லது வருமானத்தில் குறைவு ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படலாம் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“கடன் பெற்றவர்களுக்கு தேசிய வங்கி கடன் ஆலோசனை மற்றும் கடன் மேலாண்மை நிறுவனங்களை (ஏ.கே.பி.கே) அணுகலாம். மிக முக்கியமாக, கடன் வாங்கியவர்கள் தங்கள் குறிப்பிட்ட நிதி சூழ்நிலைகளை பிரதிபலிக்கும் உதவியைப் பெறுகிறார்கள்.

“எனவே கடன் தள்ளுபடி, அனைவருக்கும் சிறந்த தீர்வாக இருக்காது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.