Home நாடு தேசிய பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை இணைக்கவும்

தேசிய பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை இணைக்கவும்

587
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தேசிய பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் அமர எதிர்க்கட்சித் தலைவர்களை புத்ராஜெயா அழைக்க வேண்டும் என்று ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு 3.0 வெற்றிகரமாக அமைவதை உறுதிப்படுத்த விரும்பினால், பிரதமர் மொகிதி யாசின் அனைத்து மலேசியர்களுடனும் சேர்ந்து, ஈடுபடுவதுடன், இணைந்து பணியாற்ற வேண்டும் என்று லிம் கூறினார்.

“தேசிய கூட்டணி தலைமையிலான அரசாங்கம் அதன் தோல்விகளை ஒப்புக் கொண்டு, நாடாளுமன்ற அமர்வை நடத்துவது , கொவிட் -19 நடைமுறைகளை அடிக்கடி மாற்றுவதை நிறுத்தினால், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 மலேசியாவிற்கு இறுதியாக இருக்கும்,” என்று ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மார்ச் மாதத்தில் மொகிதின் நாடு தழுவிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகள் இருக்காது என்று உறுதியளித்திருந்தார்.

இதற்கிடையில், மோசமாக பாதிக்கப்படும் மலேசியர்களுக்கு உதவ நிதி நடவடிக்கைகளை மொகிதின் அறிவிப்பார் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.