Home நாடு லிம் குவான் எங் 26-வது நிலையில் வெற்றி பெற்றார்!

லிம் குவான் எங் 26-வது நிலையில் வெற்றி பெற்றார்!

71
0
SHARE
Ad
ஜசெக மாநாட்டில் உரையாற்றும் லிம் குவான் எங்

ஷா ஆலாம்: இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) இங்கு நடைபெற்ற ஜசெக கட்சித் தேர்தலில் நடப்பு ஜசெக தலைவர் லிம் குவான் எங் வெற்றி பெற்றார். தோற்கடிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1,719 வாக்குகள் பெற்று அவர் 30 பேர் கொண்ட மத்திய செயலவையில் 26-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

எனினும் அவரின் தேர்தல் வெற்றி அவரின் அரசியல் பயணத்தில் – நீதிமன்றத்தில் அவர் வழக்குகளை எதிர்நோக்கியிருக்கும் ஒரு நெருக்கடியான சூழலில் – மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

லிம் குவான் எங் இன்றைய தேர்தலில் வெற்றி பெறுவாரா என்பதே அரசியல் பார்வையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

#TamilSchoolmychoice

கட்சித் தேர்தலுக்குப் பின்னர் லிம் குவான் எங் ஜசெக ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.