
ஷா ஆலாம்: ஜசெகவின் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் தோல்வியடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங், இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) இங்கு நடைபெற்ற ஜசெக கட்சித் தேர்தலில் கணிப்புகளை முறியடித்து, அதிக வாக்குகளில் முதலாவதாக வெற்றி பெற்றார்.
65 வேட்பாளர்கள் களமிறங்கிய ஜசெக தேர்தலில் கோபிந்த் சிங் 2,785 வாக்குகள் பெற்று முதலாவதாகத் தேர்வு பெற்றார். 2022-ஆம் ஆண்டு கட்சித் தேர்தலிலும் கோபிந்த் சிங் டியோ முதலாவதாக வெற்றி பெற்றார். அப்போது அவர் பெற்ற வாக்குகள் 1,782 மட்டுமே! இந்த முறை அந்த எண்ணிக்கையை விட அதிகமாகப் பெற்று மீண்டும் முதலாவதாக வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்த அபார வெற்றியைத் தொடர்ந்து கோபிந்த் சிங் ஜசெகவின் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்னர் லிம் குவான் எங் அந்தப் பதவியை வகித்து வந்தார்.
இதற்கிடையில் ஜசெக தலைவர் லிம் குவான் எங் தோற்கடிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1,719 வாக்குகள் பெற்று 30 பேர் கொண்ட மத்திய செயலவையில் 26-வது நிலையில் வெற்றி பெற்றார்!