Home நாடு அந்தோணி லோக், மீண்டும் ஜசெகவின் தலைமைச் செயலாளரானார்!

அந்தோணி லோக், மீண்டும் ஜசெகவின் தலைமைச் செயலாளரானார்!

77
0
SHARE
Ad
அந்தோணி லோக்

ஷா ஆலாம்: போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற ஜசெக கட்சித் தேர்தலில் 30 பேர்களுக்கான மத்திய செயலவைக்கான போட்டியில் 2,508 வாக்குகள் பெற்று, 5-வது நிலையில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் ஜசெக தலைமைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த முறை 2022 ஜசெக தேர்தலில் 1,625 வாக்குகள் பெற்று 3-வது நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இந்த முறை 5-வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

இந்த முறை 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பேராளர்கள் ஜசெக மாநாட்டில் கலந்து கொண்டனர்.

எனினும் அதிகாரம் வாய்ந்த தலைமைச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

அவருக்குத் துணையாக 3 பேர் துணைத் தலைமைச் செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹான்னா இயோ, நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் ஆகியோரே அந்த மூவராவர்.

இந்த மூவரும் 30 பேர்கொண்ட மத்திய செயலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர்.