
ஷா ஆலாம்: இன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நடைபெற்ற ஜசெக தேர்தலில் 30 மத்திய செயலவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், புதிய தலைமைத்துவப் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
முதலாவதாக வெற்றி பெற்ற கோபிந்த் சிங் டியோ, ஜசெக தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் ஜசெக துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று நடைபெற்ற தேர்தலில் 2,215 வாக்குகள் பெற்று 13-வது நிலையில் ங்கா கோர் மிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேசிய உதவித் தலைவர்களாக சோங் சியெங் ஜென், தியோ நீ செங், இங் சுவீ லிம், ஷாரெட்சான் பின் ஜோஹான், அருள்குமார் ஜம்புநாதன் ஆகிய ஐவர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.