Home இந்தியா தமிழகம்: சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

தமிழகம்: சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

628
0
SHARE
Ad

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2- ஆம் தேதி நடந்தது.

159 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றுள்ளது. மே 7- ஆம் தேதி மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.

இதனிடையே, இன்று செவ்வாய்க்கிழமை சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் தொடங்குகிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நாள் மே 11 நடக்கும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்துக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர்.