Home நாடு பினாங்கில் நிபந்தனைகளை மீறி கூட்டுத் தொழுகையில் கலந்து கொண்ட 49 பேர் கைது

பினாங்கில் நிபந்தனைகளை மீறி கூட்டுத் தொழுகையில் கலந்து கொண்ட 49 பேர் கைது

730
0
SHARE
Ad

புக்கிட் மெர்தாஜம் : பினாங்கு மாநிலத்திலுள்ள புக்கிட் மெர்தாஜம் பகுதியில் நடமாட்ட கட்டுப்பாடு நிபந்தனைகளை மீறியதற்காக 49 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெளிநாட்டினர் பலர் கூட்டாக அமர்ந்து ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு தொழுகை நடத்தினர். ஜூரு பகுதியில், தாமான் பெலாங்கி வட்டாரத்தில் உள்ள உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இந்தத் தொழுகை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் 48 வங்காளதேச இனத்தவரும் ஒருவர் உள்நாட்டுக்காரர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதன் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்படுவதாக பினாங்கு காவல்துறை தலைவர் முகமட் ஷூஹாய்லி முகமட் ஜைன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 20) ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு காலையில் எட்டரை மணியளவில் சுமார் 200 பேர்கள் கூட்டாக ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடத்தினர்.

இவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டினர். அவர்கள் தொழுகை நடத்திய காணொலி சமூக ஊடகங்களில் மிக அதிக அளவில் பகிரப்பட்டது. அதைத் தொடர்ந்து விசாரணைகள் தொடக்கப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட பள்ளிவாசலில் 100 பேர்கள் மட்டுமே தொழுகைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்படாத மற்றவர்கள் பள்ளிவாசலுக்கு வெளியே அமர்ந்து கூட்டாக தொழுகையில் ஈடுபட்டனர்.