Home நாடு கொவிட் தடுப்பூசிகள் : 15 மில்லியனுக்கும் மேல் செலுத்தப்பட்டன

கொவிட் தடுப்பூசிகள் : 15 மில்லியனுக்கும் மேல் செலுத்தப்பட்டன

929
0
SHARE
Ad

கோலாலம்பூர் :நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 20) நள்ளிரவு வரையில் நாடு முழுமையிலும் இதுவரையில் செலுத்தப்பட்டிருக்கும் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 15 மில்லியன் அளவைகளைக் கடந்தது.

சுகாதார அமைச்சர் அடாம் பாபா தனது டுவிட்டர் பக்கத்தில் இதுவரை 15,071,814 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகப் பதிவிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் விவரங்களை மேற்காணும் வரைபடத்தில் காணலாம்.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 14 விழுக்காட்டினருக்கும் மேற்பட்ட மக்களுக்கு முழுமையான இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.