Home நாடு அடுத்த தேர்தலுக்குப் பிறகு ‘பெரிக்காத்தான் 3.0’ உருவாகும்

அடுத்த தேர்தலுக்குப் பிறகு ‘பெரிக்காத்தான் 3.0’ உருவாகும்

560
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு பெரிக்காத்தான் 3.0 உருவாகும் என்றும், நாட்டை நிர்வகிக்கும் தேசிய கூட்டணி இருக்காது என்றும் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி நம்பிக்கை கொண்டுள்ளார்.

நேற்று இரவு அம்னோ 75- வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஒரு நேர்காணலின் போது பேசிய சாஹிட், பிகேஆர் மற்றும் ஜசெக உடன் அம்னோ அரசியலின் ஒரு புதிய பாதை இருக்கும் என்ற தோற்றத்தை அளித்தார்.

“அரசியல் மலர்ச்சி நிச்சயமாக நடக்கும். நான் ஓர் அரசியல் ஜோதிடர் அல்ல, ஆனால் புதிய பாதையோ, செயலோ இருக்கும் என்பது எனக்குத் தெரியும்.

#TamilSchoolmychoice

“15-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, அல்லது எதிர்காலத்தில் நடைபெறுமா, என்பது கடவுளுக்குதான் தெரியும். அந்த நேரத்தில் தேசிய கூட்டணிக்கு பதிலாக பெரிக்காத்தான் 3.0 இருக்கும்,” என்று அவர் கூறினார்.

பிரதமர் மொகிதின் யாசின், பாஸ், தேசிய முன்னணி, அம்னோ, சபா மற்றும் சரவாக் ஆகிய பல கட்சிகளின் தலைமையில் பெர்சாத்து தலைமையிலான தேசிய கூட்டணி இந்த புதிய வரிசையில் இல்லை என்று சாஹிட் கூறினார்.

எவ்வாறாயினும், புதிய கூட்டணியில் இணைய இருக்கும் கட்சிகளின் பெயர்களை சாஹிட் வெளியிடவில்லை.