கோலாலம்பூர்: மூத்த அரசியல்வாதி இப்ராகிம் அலி நஜிப் ரசாக்கிடமிருந்து ஒரு காசோலையைப் பெற்றதாக ஒப்புக் கொண்டார். ஆனால், அது 1எம்டிபி அல்லது எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் பணத்துடன் சம்பந்தமும் இருபது தமக்குத் தெரியாது என்று அவர் கூறினார்.
“டத்தோஸ்ரீ நஜிப்பின் தனிப்பட்ட காசோலையை நான் பெற்றுள்ளேன் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், இது எஸ்ஆர்சி அல்லது 1எம்டிபி பணத்துடன் தொடர்புடையதா என்பது நான் உணரவில்லை, ஏனெனில் காசோலையில் எஸ்ஆர்சி அல்லது 1எம்டிபி பெயர் இல்லை.
“நான் எப்போது அதைப் பெற்றேன் என்பது எனக்கு நினைவில் இல்லை, ஆனால் 13-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு, 1எம்டிபி அறிமுகம் ஆவதற்கு முன்பே. இது தெரியவந்திருந்தால், நான் நிச்சயமாக அதை ஏற்றிருக்க மாட்டேன்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.