Home உலகம் பி .1.617 பிறழ்வு மற்ற வகைகளை விட எளிதில் பரவுகிறது- உலக சுகாதார நிறுவனம் அச்சம்

பி .1.617 பிறழ்வு மற்ற வகைகளை விட எளிதில் பரவுகிறது- உலக சுகாதார நிறுவனம் அச்சம்

478
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொவிட்-19 பிறழ்வு உலகளாவிய கவனத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட ஆய்வுகளின்படி பி .1.617 பிறழ்வு மற்ற வகைகளை விட எளிதில் பரவுகிறது என்றும் மேலும் ஆய்வு தேவை என்றும் அது கூறியது.

இந்த பிறழ்வு ஏற்கனவே 30- க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

#TamilSchoolmychoice

இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகளிலும் இது காணப்படுகிறது.

தற்போது இந்தியாவில் ஓர் ஆபத்தான எழுச்சிக்கு காரணமாக இந்த பிறழ்வு இருக்கிறதா என்பதை நிறுவ ஆய்வு செய்யப்படுகிறது.

இந்தியாவில் திங்களன்று 366,161 புதிய தொற்றுநோய்களும் 3,754 இறப்புகளும் பதிவாகியுள்ளன. உண்மையான புள்ளிவிவரங்கள் அறிக்கையிடப்பட்டதை விட மிக அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிராணவாயு பற்றாக்குறை ஒரு பிரச்சனையாகத் தொடர்கிறது.