Home நாடு நாட்டில் அனைத்து குறுக்கு வழிகளும் கண்காணிக்கப்படும்

நாட்டில் அனைத்து குறுக்கு வழிகளும் கண்காணிக்கப்படும்

482
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நோன்பு பெருநாளுக்கு முன்னால் மாவட்டங்கள் அல்லது மாநிலங்களை கடக்க சாலை பயனர்கள் பயன்படுத்துவதாக நம்பப்படும் நாடு முழுவதும் உள்ள குறுக்கு வழிகளைகளை காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர் என்று புக்கிட் அமான் உள் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு தலைவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குறுக்கு வழிகளின் பட்டியலை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்றும், காவல் துறை அவ்வப்போது கண்காணிக்கும் என்றும் அவர் கூறினார்.

“பல குறுக்கு வழிகள் உள்ளன. எல்லா இடங்களையும் ஒரே நேரத்தில் கண்காணிக்க முடியாது முடியாது, அதனால்தான் வழிகள் கல் தடைகள் மற்றும் முள்வேலிகளால் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. அனுமதியின்றி கடக்க முயற்சிக்கும் நபர்கள் இருந்தால், வீடு வீடாக சோதனைகளை மேற்கொள்ள காவல்துறை நடவடிக்கை எடுக்கும்,” என்று என்று அவர் சினார் ஹாரியானுக்கு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

குறுக்கு வழியைத் தடுப்பதன் மூலம் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த காவல் துறை விரும்பவில்லை, மாறாக கொவிட் -19 பரவுவதைத் தடுக்க விரும்புகிறது என்றார்.

“மக்கள் அதனை மீறி செயல்பட்டால், இது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். நாங்கள் பொதுமக்களை தொந்தரவு செய்ய முயற்சிக்கவில்லை. தேசிய பாதுகாப்பு மன்றத்தின் நடைமுறைகளுக்கு பொதுமக்கள் மாவட்டங்களையும் மாநிலங்களையும் கடக்கக்கூடாது என்று கூறியுள்ளது, ” என்று அவர் மேலும் கூறினார்.