Home நாடு கடன் தள்ளுபடியை அரசு அறிவிக்க வேண்டும்!- முடா

கடன் தள்ளுபடியை அரசு அறிவிக்க வேண்டும்!- முடா

520
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் மூன்றாவது முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் வங்கிகள் தானியங்கி முறையில் கடன் தள்ளுபடியை அறிவிக்க அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

தேசிய கூட்டணி அரசாங்கம் கடன் தள்ளுபடியை அமல்படுத்துவதை அறிவிக்க மறுத்ததற்கு என்ன காரணம் என்று தனக்குத் தெரியவில்லை என்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் தெரிவித்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டபோது, ​​தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட பின்னர் மக்களின் வருமானம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது என்றார்.

#TamilSchoolmychoice

“சாக்குப்போக்குகளை நான் விரும்பவில்லை. வாகன மற்றும் வீட்டுக் கடன்கள் குறித்து அரசாங்கம் தள்ளுபடி அறிவிக்க வேண்டும். அடுத்த ஆறு மாதங்கள் வரை இது தொடரப்பட வேண்டும். இதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். வங்கிகள் நட்டம் அடையாது.

“முதலாம் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை போது, மக்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக கடன் தள்ளுபடியின் போதும், வங்கிகள் இலாபத்தை பதிவு செய்துள்ளன,” என்று அவர் கூறினார்.