Home நாடு தோல்வியுற்ற அரசியல்வாதிகளே பதவி விலக வேண்டும்!

தோல்வியுற்ற அரசியல்வாதிகளே பதவி விலக வேண்டும்!

520
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அரசு ஊழியர்கள் அல்ல, தோல்வியுற்ற அரசியல்வாதிகளே தங்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

தேசிய கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்க மறுக்கும் அரசு ஊழியர்களை பதவி விலகுமாறு கேட்டுக் கொண்ட பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு பதிலளிக்கும் விதத்தில் லிம் அவ்வாறு கூறினார்.

“ஹாடியுன் நான் உடன்படவில்லை, ஏனெனில் அரசியல் தலைவர்களே தங்கள் கடமைகளில் தோல்வியுற்றவர்கள. இவர்களே தேசிய நலனுக்காக பதவி விலக வேண்டும். மலேசிய அரசு சேவை மோசமடைவதைக் காணத் தயாராக இல்லாத அரசு ஊழியர்களை நான் தவறு எனக் கூறமாட்டேன்,” என்று லிம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த ஞாயிற்றுக்கிழமை, இன்றைய அரசாங்கத்தை ஆதரிக்காதவர்கள் பதவி விலக ஹாடி கோரினார்.

பிரதமர் மொகிதின் யாசின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இருக்காது என்று கூறிய ஒரு மாதத்திற்குள், நாடு தழுவிய மூன்றாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நேற்று அறிவிக்கப்பட்ட விதம் புத்ராஜெயாவின் தோல்விக்கு சான்றாகும் என்று லிம் கூறினார்.

இப்பகுதியில் கொவிட் -19 தொற்றுக்கு எதிரான போரில் மோசமாக செயல்படும் நாடுகளில் மலேசியாவும் இருப்பதாக லிம் கூறினார். மேலும் இது நாட்டினை “சிறிய இந்தியா” ஆக மாறக்கூடும் என்று எச்சரித்தார்.