Home நாடு தேசிய கூட்டணியை பிடிக்கவில்லை என்றால் அரசு ஊழியர்கள் பதவி விலகலாம்

தேசிய கூட்டணியை பிடிக்கவில்லை என்றால் அரசு ஊழியர்கள் பதவி விலகலாம்

958
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கிய கட்சிகளை ஆதரிக்காவிட்டாலும் ஆளும் கட்சிகளால் கட்டுப்படுத்தப்படும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை, அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் விரும்புகிறார்.

அரசு ஊழியர்கள் தாங்கள் ஆதரிக்கும் கட்சியிலிருந்து அரசாங்கம் இல்லாததால், அவர்கள் பதவி விலகலாம் என்று அவர் கூறினார்.

“விதிகளின்படி, தக்கவைக்கப்பட்ட அதிகாரிகள், அரசாங்கமாக இருக்கும் கட்சியை ஆதரிக்காவிட்டாலும் கூட, ஆளும் கட்சியால் கட்டுப்படுத்தப்படும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.

#TamilSchoolmychoice

“தார்மீக ரீதியாக, அவர்கள் பதவி விலகலாம். அவர்கள் விரும்பியபடி பதவி வகிக்க முடியாது,” என்று அவர் நேற்று தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.