இதற்கிடையில் சபாவின் எஸ்ஏபிபி கட்சியும் பெரிக்காத்தான் கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.
கூட்டணி தலைவர் முஹிடின் யாசின் தலைமைத்துவத்தின் மீது பாஸ் அதிருப்தி கொண்டிருக்கிறது என்பதையே அகமட் சம்சூரியின் பதவி விலகல் காட்டுகிறது.
பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவர் ஹம்சா சைனுடின் பெரிக்காத்தான் கூட்டணி துணைத் தலைவராகவும் உதவித் தலைவர் அகமட் பைசால் அசுமு பெரிக்காத்தான் தகவல் பிரிவு தலைவராகவும் பெர்சாத்து மகளிர் பிரிவு தலைவி மாஸ் எமியாதி சம்சூடின் பெரிக்காத்தான் கூட்டணியின் மகளிர் தலைவியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரிக்காத்தான் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல்களால் பாஸ் கட்சி அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.