Home நாடு பெர்சாத்து கட்சிக்குத் தாவி, அதிர்ச்சி தந்த மசீச இளைஞர் பகுதித் தலைவர்!

பெர்சாத்து கட்சிக்குத் தாவி, அதிர்ச்சி தந்த மசீச இளைஞர் பகுதித் தலைவர்!

106
0
SHARE
Ad
நடுவில் ஹம்சா சைனுடின் – அவருக்கு வலது புறத்தில் லியோங்

கோலாலம்பூர்: பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் மையப் புள்ளியாகத் திகழும் பெர்சாத்து கட்சி அரசியல் செல்வாக்கை இழந்து வருகிறது என அரசியல் பார்வையாளர்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) முக்கியத் தலைவர் ஒருவர் அந்தக் கட்சிக்குத் தாவி அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

மசீசவின் தேசிய இளைஞர் பகுதி தலைமைச் செயலாளர் லியோங் கிம் சூன் 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் மசீசவிலிருந்து விலகி பெர்சாத்து கட்சியில் இணைந்திருக்கிறார்.

பகாங் மாநிலத்தின் ஜாண்டா பாய்க் இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் லியோங், பெர்சாத்து துணைத் தலைவர் ஹாம்சா சைனுடின் முன்னிலையில் தன் ஆதரவாளர்களுடன் இணைந்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

உடனடியாக அவரை பெர்சாத்து கட்சியின் மலாய்க்காரர் அல்லாத இணை உறுப்பினர்கள் பிரிவில் பகாக் மாநிலம் மற்றும் பெந்தோங் வட்டாரத்திற்கு பொறுப்பாளராக ஹம்சா நியமித்துள்ளார். லியோங்கின் அரசியல் அனுபவத்தையும், தொடர்புகளையும் ஹம்சா பாராட்டிப் பேசினார்.

மசீசவின் முன்னாள் தலைவரும் பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான லியோவ் தியோங் லாய்யின் அரசியல் செயலாளராகவும் லியோங் கிம் சூன் பணியாற்றியிருக்கிறார். அப்போது லியோவ் மசீச தேசியத் தலைவராகவும் அமைச்சராகவும் திகழ்ந்தார். மசீச இளைஞர் பகுதியின் தேசிய தலைமைச் செயலாளர், பகாங் மசீச இளைஞர் பகுதித் தலைவர் ஆகிய பொறுப்புகளையும் அவர் வகித்திருக்கிறார்.