Home கலை உலகம் இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார்!

இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார்!

87
0
SHARE
Ad
மனோஜ் பாரதிராஜா

சென்னை : பிரபல தமிழ்ப் பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48. சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து அவர் இன்று மாரடைப்பால் காலமானார்.

‘தாஜ்மகால்’ என்ற படத்தில் தன் மகன் மனோஜை கதாநாயகனாக பாரதிராஜா அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து பல படங்களில் மனோஜ் கதாநாயகனாகவும், துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். எனினும் அவரால் ஒரு முன்னணி நடிகராக ஒளிர முடியவில்லை.

#TamilSchoolmychoice

இந்நிலையில் அவர் திடீரென மரணமடைந்துள்ளார். பாரதிராஜாவுக்கு மனோஜூடன், ஜனனி என்ற மகளும் உண்டு. ஜனனி மலேசியாவைச் சேர்ந்த வணிகர் ஒருவரை மணம் புரிந்து மலேசியாவில் வசித்து வருகிறார்.