Home இந்தியா தமிழக சட்டமன்றம்: எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

தமிழக சட்டமன்றம்: எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

616
0
SHARE
Ad

சென்னை: தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுகப்பட்டதற்கான கடிதம் சட்டமன்ற செயலரிடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் வழங்கினர்.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்புகளுக்கு இடையே கடும் வாக்குவாதங்களுக்கு மத்தியில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக காவல் துறையினர் அதிமுக அலுவலகத்தில் குவிக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

கூட்டத்தில், அதிமுக கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்ததால், அதனால் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அதிகமாக இருந்தது.