Home நாடு கடந்த கால பெருமைகளைப் பேசுவதை நிறுத்த வேண்டும்

கடந்த கால பெருமைகளைப் பேசுவதை நிறுத்த வேண்டும்

542
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் அம்னோவின் 75-வது ஆண்டு நிறைவு கொண்டாடத்தை பெருமைப்படுத்துவதற்கு மூன்று முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அம்னோ கட்சி இன்று தனது 75- வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

“காலாவதியான பெருமைகளுடன் தொடர வேண்டாம். கடந்த கால பெருமைகளைப் பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“இரண்டாவதாக, அதன் ஆதரவாளர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். தலைமுறை மாற்றம் உண்மையானது மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

“சிறந்த அரசியல் யோசனைகள் மற்றும் எண்ணங்கள் இனி பேச்சாளரின் வயதைக் கொண்டு அளவிடப்படுவதில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

அண்மையில் கஷ்டங்கள் இருந்தபோதிலும் கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் அம்னோ ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்த முகமட், அதன் உறுப்பினர்கள் கடுமையாக உழைத்தால், ஒன்றுபட்டு, தேசத்தை முன்னோக்கி நகர்த்தக்கூடிய கருத்துகளை உருவாக்கினால் கட்சி பலத்திலிருந்து வலிமைக்கு வளரும் என்று தான் நம்புவதாக கூறினார்.