Home நாடு 259,740 பிபைசர் தடுப்பூசிகள் மே 19 முதல் பெறப்படும்

259,740 பிபைசர் தடுப்பூசிகள் மே 19 முதல் பெறப்படும்

548
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுமார் 259,740 பிபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் மே 19 முதல் 21 வரை மலேசியாவை வந்தடையும்.

இது மே 21- க்குள் நாட்டில் பெறப்பட்ட மொத்தம் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை 2,490,930 -ஆக இது உயர்த்தும் என்று தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது தொகுதி மே 20- ஆம் தேதி வர உள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் 615,120 தடுப்பூசிகள் ஜூன் 1- ஆம் தேதி அனுப்பப்படும்.