Home நாடு மே 12 முதல் நாடு தழுவிய முழு நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

மே 12 முதல் நாடு தழுவிய முழு நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை

577
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றுகளைத் தொடர்ந்து எதிர்வரும் மே 12 முதல் நாடு தழுவிய முழு நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமுலுக்கு வருகிறது.

பிரதமர் மொகிதின் யாசின் இதனை அறிவித்தார். இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை எதிர்வரும் ஜூன் 7 வரை அமுலில் இருக்கும்.

நாடு தழுவிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலப்படுத்தப்படாது என பிரதமர் ஏற்கனவே அறிவித்திருந்தார். எனினும் அதற்கு மாறாக இப்போது முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மொகிதின் அறிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இன்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்திற்கு மொகிதின் யாசின் தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.