இதன்மூலம் 96.60 பில்லியன் ரிங்கிட்டை (23 பில்லியன் அமெரிக்க டாலர்) மீட்க அவர்கள் இலக்கு கொண்டிருக்கிறார்கள். இந்தத் தகவலை நிதியமைச்சும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 6 வழக்குகள் 1 எம்டிபி சார்பிலும், 16 வழக்குகள் எஸ்ஆர்சி நிறுவனம் சார்பிலும் தொடுக்கப்பட்டன.
வழக்கு தொடுக்கப்பட்ட பிரதிவாதிகளில் உள்நாட்டவரும் அடங்குவர். இவர்களிடம் இருந்து 300 மில்லியன் ரிங்கிட் மீட்க வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.
1 எம்டிபி தொடர்பான ஊழல் பணத்தை மீட்க அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதி இதுவாகும்.