Home Featured நாடு சர்ச்சைக்குரிய காணொளியில் உள்ள மாணவர்கள் மீது விசாரணை – கமலநாதன் தகவல்

சர்ச்சைக்குரிய காணொளியில் உள்ள மாணவர்கள் மீது விசாரணை – கமலநாதன் தகவல்

854
0
SHARE
Ad

Kamalanathanபாசீர் கூடாங் – பள்ளி வளாகத்தில் மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் கட்டியணைத்து காதலை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று நேற்று நட்பு ஊடகங்களில் பலராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டு கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

இது குறித்து துணைக் கல்வியமைச்சர் கமலநாதன் கூறுகையில், அந்தச் சம்பவம் எந்தப் பள்ளியில் நடந்தது என்பதை கல்வியமைச்சு அடையாளம் காண முயற்சி செய்து வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.

“நான் இன்னும் அந்தக் காணொளியைப் பார்க்கவில்லை. அந்தக் காணொளியைப் பார்க்கவுள்ளேன். சிலர் என்னிடம் அது குறித்து தகவல் அளித்து என்னுடைய பார்வைக்குக் கொண்டு வந்துள்ளனர்”

#TamilSchoolmychoice

“அந்தச் சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்பதை விசாரணை மூலம் கண்டறிவோம்” என்று நேற்று எஸ்எம்கே பாசீர் கூடாங் பள்ளியில் நடைபெற்ற எஸ்பிஎம் ஆங்கிலத் தேர்வைப் பார்வையிட்ட பின்னர், கமலநாதன் தெரிவித்துள்ளார்.