Home Featured இந்தியா பிரிட்டனில் மோடிக்கு எதிராகப் போராட்டம் நடத்தவுள்ள ‘இந்தியாவின் மகள்’ இயக்குநர்!

பிரிட்டனில் மோடிக்கு எதிராகப் போராட்டம் நடத்தவுள்ள ‘இந்தியாவின் மகள்’ இயக்குநர்!

540
0
SHARE
Ad

leslie udwinபுதுடெல்லி – அடுத்த வாரம் பிரிட்டன் செல்லும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, அங்கு போராட்டம் நடத்த ஹாலிவுட் பெண் இயக்குநர் லெஸ்லி உட்வின் தயாராகி வருகின்றார்.

அதற்காக அவர் நட்பு ஊடகங்களின் வழியாக ஆதரவாளர்களைத் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறையை மையமாக வைத்து, கடந்த ஆண்டு லெஸ்லி இயக்கிய ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

#TamilSchoolmychoice

ஆனால், மாணவியின் பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிஜக் குற்றவாளியின் பேட்டி, அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றதால், அந்தப் படத்தை இந்தியாவில் வெளியிட, மத்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 12-ம் தேதி பிரிட்டனுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டு, லண்டனில் பிரிட்டன் வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

அவர் பேசும் இடத்தின் அருகே, மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு, ஆட்களை திரட்டும் நடவடிக்கைகளில், லெஸ்லி உட்வின் ஈடுபட்டுள்ளார்.