Home Featured உலகம் ரஷ்ய விமானம் வெடித்துச் சிதறியது உலக செயற்கைக்கோளில் பதிவு!

ரஷ்ய விமானம் வெடித்துச் சிதறியது உலக செயற்கைக்கோளில் பதிவு!

525
0
SHARE
Ad

russia12மாஸ்கோ – கடந்த சனிக்கிழமை எகிப்தில் இருந்து ரஷ்யா நோக்கி சென்ற ரஷ்யன் ஏர்லைன்ஸ் விமானம் ஷினாய் தீபகற்பம் அருகே நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில் 224 பயணிகள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், விமான வெடித்துச் சிதறிய நேரத்தில் ஷினாய் அருகே ஏற்பட்ட வெப்ப ஒளிக்கீற்றை செயற்கைக்கோள் பதிவு செய்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், செயற்கைக்கோள் பதிவு செய்திருப்பது ரஷ்ய விமானம் வெடித்துச் சிதறியதைத் தான் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். எனினும், விமானம் வெடித்ததற்கான காரணம் என்னவென்பது முழு விசாரணைக்குப் பின் தான் கணித்துக் கூற முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்த சம்பவத்திற்கு பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.