Home Featured நாடு மலேசியர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் இலவச டிஜிட்டல் தொலைக்காட்சி சேவை!

மலேசியர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் இலவச டிஜிட்டல் தொலைக்காட்சி சேவை!

666
0
SHARE
Ad

digitalTVdttbசைபர் ஜெயா – அடுத்த ஆண்டு தொடங்கி மலேசியர்களுக்கு டிஜிட்டல் டெரஸ்ட்ரியல் டெலிவிசன் பிராட்கேஸ்டிங் (Digital Terrestrial Television Broadcasting) முறையில் இலவச டிஜிட்டல் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையை வழங்க எம்ஒய்டிவி பிராட்கேஸ்டிங் செண்ட்ரியான் பெர்ஹாட் (MYTV Broadcasting Sdn Bhd) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து எம்ஒய்டிவி தலைமைச் செயல்முறை அதிகாரி மொஹமெட் ரெட்சுவான் யாஹ்யா கூறுகையில், இந்தச் சேவையைப் பெற வாடிக்கையாளர்கள் ‘டாப் பாக்ஸ்’ (Top Box) அல்லது ஐடிடிவி (iDTV) என்ற டிகோடர் கருவியைப் பயன்படுத்த வேண்டும். அதில் ‘DTTB Receiver Consumer Label’ என்ற ஏற்பான் இருக்கும். அதை மலேசியத் தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு வழங்குகிறது. அந்த ஏற்பானைக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களின் கருவிகள் இந்த டிடிடிபி சேவையைப் பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

நாடெங்கிலும் இந்த டிடிடிபி கருவிகளை விற்பனை செய்யும் அதிகாரத்தை எம்ஒய்டிவி மட்டுமே கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்தச் சேவை மூலமாக வாடிக்கையாளர்கள் துல்லிய ஒளிபரப்பில் திரைப்படங்கள், ஒலிப்பரப்புகளைப் பெறுவதோடு, இலவசமாக தொலைக்காட்சி அலைவரிசைகளையும் கண்டுகளிக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

2 மில்லியன் டிகோடர்களை குறைந்த வருமானம் (B40) கொண்ட குடும்பங்களுக்கு இலவசமாக வழங்க தங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக மொஹமட் தெரிவித்துள்ளார்.

தகவல், படம்: நன்றி ஸ்டார் இணையதளம்.