Home One Line P2 “பகாங் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் தொடர்பு ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்” – காமாட்சி...

“பகாங் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் தொடர்பு ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்” – காமாட்சி துரைராஜூ

1315
0
SHARE
Ad

காராக் – பகாங் மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களும், தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என கடந்த சனிக்கிழமை ஜூலை 27-ஆம் தேதி இங்கு மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பகாங் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கிடையிலான தகவல் தொழில்நுட்பத் தொடர்பு போட்டிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கு கொண்டு உரையாற்றியபோது சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ கூறினார்.

மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கத்தின், தித்தியான் டிஜிட்டல் திட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 10 வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகமய மாறுதலுக்கேற்ப தகவல் தொடர்புத் திறனறிவை (ICT) பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு சீரிய முறையில் செயல்வடிவம் காணப்பெற்று வருகின்றது. தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டி கடந்த 5 வருடங்களாக நடைப்பெற்று வருகிறது. இதில் 5 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அதில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் புதிர்ப்போட்டி மட்டுமே மாநில அளவில் நடைபெற்று வருகிறது.

#TamilSchoolmychoice

பகாங் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, கடந்த சனிக்கிழமை ஜூலை 27-ஆம் தேதி தேசிய வகை காராக் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில், சிறப்பாக நடைப்பெற்றது.

வரவேற்புரையாற்றிய 2019 ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியின் ஏற்பாட்டுக் குழு தலைவர்  குணசேகரன் கந்தசுவாமி (படம்) இன்றைய போட்டிக்கு மாணவர்களை அழைத்து வந்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார், அவர் தம் உரையில் இப்போட்டியில் மாணவர்கள் முதல் முறையாக புதிய தொழில்நுட்பக் கருவியை பயன்படுத்தி, 50 கேள்விகளுக்கு பதிலளித்தனர் என்றும், இதன் மூலம் மாணவர்கள் 50 புதிய தொழில்நுட்பம் சார்ந்த நுட்பங்களை இன்று கற்றுக்கொண்டனர் என்றும் கூறினார்.

இதன் மூலம் திறன் சார்ந்த மாணவர்களை எதிர்காலத்தில் உருவாக்க முடியும், தொடர்ந்து பகாங் மாநில நிலையிலான தகவல் தொடர்பு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்த அனைத்து தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்,

நிகழ்ச்சியில் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டியினை ஏற்பாடு செய்த மலேசிய தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

எதிர்வரும் காலங்களில் தொழில்நுட்பம் தொடர்பானப் போட்டிகளை நடத்த தன்னால் முடிந்த உதவிகளை செய்ய இருப்பதாக அவர்தம் உரையில் கூறினார். “இன்றைய தமிழ்ப் பள்ளி மாணவர்கள் அவர்களிடம் இருக்கும் திறமையை தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளில் ஈடுபடுத்திக் கொண்டு மாணவர்களின் திறனை வெளிப்படுத்த வேண்டும். இன்றைய நிகழ்ச்சிக்கு அழைத்தற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, இப்போட்டியின் செலவில் ஒரு பகுதியாக 3000 ரிங்கிட் நிதியை நன்கொடையாக வழங்கியதோடு, மாணவர்களுக்கு பரிசுகளையும் எடுத்து வழங்கினார்.

பகாங் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்கள்.

PAHANG STATE LEVEL
PTD ICT QUIZ WINNERS 2019

Name of Student – School Name

1. TRANITHA SURIYA TAMILARASU SJKT BENTONG, BENTONG
2. RAAGAVI RAJENDRAN SJKT BENTONG, BENTONG
3. THIRUPATHI NARAYANASAMY SJKT KARAK, KARAK
4. SHARU SRI JEYARAJ SJKT LDG KEMAYAN, BERA
5. KAVINESH RAMESH SJKT LDG SELBRONE, K. LIPIS
6. NARMADHA MAHESAN SJKT KARAK, KARAK
7. THIRU TAMIL CHELVAN SJKT KEMAYAN, BERA
8. SANTHOSH RAJ TAMIL SELVAN SJKT KEMAYAN, BERA
9. UTAYA RAMACHANDRAN SKK SJKT MENTAKAB, MENTAKAB
10. SARAVANETHTHEVAR SJKT KARAK, KARAK
MARATTANDAWAN
11. DEVA KALIDASH SJKT LDG MENTAKAB, MENTAKAB
12. RIVASHAN MURALEE SJKT TANAH RATA, C. HIGHLAND

Note: 12 Winners from Pahang State Level ICT Quiz 2019 have qualified for National Level ICT Competition 2019

மேற்காணும் பட்டியல் பகாங் மாநில அளவிலான போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் 12 நிலை வெற்றியாளர்களைக் கொண்டதாகும். இம்மாணவர்கள் தேசிய நிலையிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.