Home கலை உலகம் ஆஸ்ட்ரோ புதிய தொடர்: ஆரம்பப் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் ‘பள்ளிக்கூடம்’

ஆஸ்ட்ரோ புதிய தொடர்: ஆரம்பப் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் ‘பள்ளிக்கூடம்’

209
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆரம்பப் பள்ளி மாணவர்களின் கல்விப் பயணத்தைச் சித்திரிக்கும்
‘பள்ளிக்கூடம்’ நாடகத்தை ஆஸ்ட்ரோ முதல் ஒளிபரப்புச் செய்கிறது. குழந்தைகள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கும் தமிழ்ப் பள்ளிகளைச் சார்ந்த முதல்
உள்ளூர் தமிழ் தொடர் நவம்பர் 18 முதல் இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)-இல் முதல் ஒளிபரப்புக் காணுகிறது

(அலைவரிசை 201) வாயிலாகவும் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் பள்ளிக்கூடம் எனும் உள்ளூர் தமிழ் குடும்ப நாடகத் தொடரை அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் கண்டு மகிழலாம்.

உள்ளூர் திறமையாளரான தினேஷ் சாரதி கிருஷ்ணன் இயக்கியப் பள்ளிக்கூடம், குழந்தைகள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கும் தமிழ்ப் பள்ளிச் சார்ந்த முதல் உள்ளூர் தமிழ் தொடர் ஆகும்.

#TamilSchoolmychoice

ஆரம்பப் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் மனநலச் சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக இந்தத் தொடர் கொண்டுள்ளது. மொழிச் சிக்கல்கள் மற்றும் பகடிவதையை எதிர்க்கொள்ளப் போராடும் யமுனா எனும் 10 வயதுச் சிறுமியின் பயணத்தை இத்தொடர் சித்திரிக்கிறது.

மாணவர்களின் தமிழ் மொழித் திறனை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் முத்தமிழ் விழா என்றப் போட்டியில் பங்கேற்க அவளது ஆசிரியர் அவளைத் தேர்ந்தெடுக்கும்போது, அவளுடையப் பங்கேற்புக் குறித்துப் பெற்றோரின் மாறுபட்டக் கருத்துக்கள் உட்படக் கடினமானச் சவாலை எதிர்கொள்கிறாள்.
இந்தத் தொடர் யமுனா இந்தச் சவால்களை எவ்வாறு கையாள்கிறாள் என்பதையும் இறுதியில் இந்தத் தடைகளைக் கடந்து எவ்வாறு வெற்றிப் பெறுகிறாள் என்ற அவளது பயணத்தை ஆராய்கிறது.

பவித்திரன் சுகுந்தன், நவோமிகா அவிக்னா கவிதரன், வனேசா குரூஸ், சசி தரன், அருணா ராஜ், சங்கபாலன் மற்றும் குபேன் மகாதேவன் உள்ளிட்டப் பிரபல மற்றும் அறிமுக உள்ளூர் கலைஞர்கள் இந்தத் தொடரில் நடித்துள்ளனர்.

பள்ளிக்கூடம் தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு, ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள்.

மேல் விபரங்களுக்கு astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.