மாஸ்கோ : இரஷ்யா, கொவிட்19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.
அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் இதனை அறிவித்துள்ளார். இந்த புதிய தடுப்பு மருந்து, தொற்று நோய்க்கு எதிரான, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இரஷ்ய அமைச்சர்கள் மத்தியில் காணொளி அமர்வில் பேசிய புதின், “இன்று காலை, உலகில் முதன்முறையாக, கொவிட்19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து உருவாக்கி பதிவு செய்யப்பட்டுள்ளது. என் மகள்களில் ஒருவர் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனம், இரஷ்யா, கொவிட்19 தடுப்பு மருந்து உருவாக்குதலில் முறையாக அனைத்துவித விதிமுறைகளையும் பின்பற்றி பாதுகாப்பான மருந்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.