Home One Line P1 மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா – “தமிழ்க் கல்வி மின்புதிர் போட்டி”

மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா – “தமிழ்க் கல்வி மின்புதிர் போட்டி”

1701
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்பில், இன்று 21.10.2020 புதன்கிழமை நாட்டில் (கொவிட்-19 பாதிப்புகளினால் மூடப்பட்டிருக்கும் பள்ளிகள் தவிர்த்து) உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் ‘தமிழ்க்கல்வி நாள்’ எளிமையான முறையிலும் பாட வேளைகளைப் பாதிக்காமலும் கொண்டாடப்பட வேண்டுமென டத்தோ ப.கமலநாதன் கேட்டுக்கொண்டார்.

அதோடு, கோவிட் 19 பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியை நடத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

ப.கமலநாதன் மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழா கொண்டாட்ட ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமாவார்.

‘தமிழ்க்கல்வி மின்புதிர்’ போட்டி

#TamilSchoolmychoice

மேலும், தமிழ்க்கல்வி நாளை முன்னிட்டு தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக ‘தமிழ்க்கல்வி மின்புதிர்’ போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 19.10.2020 திங்கட்கிழமை காலை மணி 10:00 தொடங்கிய இந்தப் போட்டி இன்று 21.10.2020 புதன் நள்ளிரவு மணி 12:00 வரையில்  நடைபெறும் என்பதை ஏற்பாட்டாளர்கள் நினைவுறுத்தியுள்ளனர்.

மாணவர்கள் தமிழ்க்கல்வி மின்புதிர் கூகிள் படிவத்தின் மூலமாக இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம். மிக அதிகமான புள்ளிகளைப் பெறுகின்ற தலா 1000 மாணவர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும்.

தமிழ்க்கல்வி மின்புதிர் கூகிள் படிவ இணைப்பு [Google Form Link]

தொடக்கப்பள்ளிப் பிரிவு :- https://tiny.cc/mytk204_puthirSekRen

இடைநிலைப்பள்ளிப் பிரிவு :– https://tiny.cc/mytk204_puthirSekMen

தமிழ்க்கல்வி நாளை முன்னிட்டு டத்தோ ப.கமலநாதன் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். இவர், மலேசியாவில் தமிழ்க்கல்வி 204ஆம் ஆண்டு விழாவின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையைக் கீழே காணலாம் :

‘தமிழ்க்கல்வி மின்புதிர்’ போட்டிக்கான விதிமுறைகள்