Home One Line P1 10 விழுக்காடு நிர்வாக, கண்காணிப்பு ஊழியர்கள் அலுவலகத்தில் பணிபுரிய அனுமதி

10 விழுக்காடு நிர்வாக, கண்காணிப்பு ஊழியர்கள் அலுவலகத்தில் பணிபுரிய அனுமதி

601
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிள்ளான் பள்ளத்தாக்கு, சபா மற்றும் லாபுவானில் உள்ள 3.1 மில்லியன் தொழிலாளர்களில் மொத்தம் 776,135 பேர் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் முடிவுக்கு ஏற்ப, நாளை (அக்டோபர் 22) முதல் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி இன்று புதன்கிழமை அறிவித்தார்.

அனைத்துலக வணிக மற்றும் தொழில் துறை அமைச்சருமான அஸ்மின் கூறுகையில், 3.1 மில்லியன் தொழிலாளர்களில் 776,135 தொழிலாளர்கள் அல்லது 25 விழுக்காட்டினர் நிர்வாகம் மற்றும் கண்காணிப்புப் பணியில் உள்ளவர்கள்.

“இருப்பினும், நிர்வாகம் மற்றும் கண்காணிப்பு மட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் இருக்க வேண்டிய தொழில்களின் தேவைகளை கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம், கணக்கியல், நிதி, நிர்வாகம் மற்றும் பிற பணிகளை உள்ளடக்கிய பணிகளுக்கு, அதிகபட்சமாக 10 விழுக்காடு தொழிலாளர்களை அனுமதிக்க அமைச்சு ஒப்புக்கொள்கிறது. சட்ட அலுவலகங்கள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அலுவலகங்கள், வாரத்தில் மூன்று நாட்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நான்கு மணிநேரங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது, ” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நிறுவனங்கள் இந்த தொழிலாளர்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிய அஸ்மின், நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணை முழுவதும் பணியாற்ற அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும் பயணத்திற்கான ஒப்புதலுக்கான கடிதங்களை மட்டுமே முதலாளிகள் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

முன்னதாக, நேற்று, பிரதமர் மொகிதின் யாசின் தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்பு அமர்வின் முடிவில், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையில் உள்ள சிவப்பு மண்டலத்தில் உள்ள பொது மற்றும் தனியார் துறை அனைத்து ஊழியர்களையும் இனி வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக இஸ்மாயில் சப்ரி கூறியிருந்தார்.

“இந்த மாநிலங்கள் (கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான், சபா), நகரங்களில் நேர்மறையான கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்துவரும் போக்கைப் பார்க்கும்போது, ​​இந்த பகுதி சம்பந்தப்பட்ட இயக்கத்திற்கு கட்டுப்பாட்டை கடுமையாக்க வேண்டும்.

“சிலாங்கூர் மாநிலத்தில் இன்று வரை ஒன்பது தொற்றுக் குழுக்கள் இருப்பதாக சுகாதார அமைச்சு முன்னர் அறிவித்தது.

“எனவே, சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில், இன்றைய சிறப்பு அமர்வில், பொதுத்துறை ஊழியர்களுக்கும், தனியார் ஊழியர்களுக்கும் அலுவலகத்திற்கு வர தேவையில்லை. வீட்டிலிருந்து மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று ஒப்புக் கொண்டது,” என்று அவர் கூறினார்.

இந்த நடவடிக்கை கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான், சிலாங்கூர் மற்றும் சபா ஆகிய இடங்களில் இருந்து 1 மில்லியன் தொழிலாளர்களைக் குறைக்கும் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

“இந்த காலகட்டத்தில் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டிய ஒவ்வொரு ஊழியருக்கும் பயண வெளியீட்டு கடிதத்தை வழங்குமாறு முதலாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது,” என்று அவர் கூறினார்.