Home நாடு அஸ்மின் அலி – அமிருடின் ஷாரி வாக்களித்தனர்

அஸ்மின் அலி – அமிருடின் ஷாரி வாக்களித்தனர்

506
0
SHARE
Ad

கோம்பாக் : சிலாங்கூர் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் ஆர்வத்துடன் உன்னிப்பாகக் கவனிப்பது இரண்டு வேட்பாளர்களை! நடப்பு மந்திரி பெசார் அமிருடின் ஷாரி அதில் ஒருவர். சுங்கை துவா சட்டமன்றத்திற்குப் போட்டியிடுகிறார்.

பக்காத்தான் கூட்டணி வெற்றி பெற்றால் – அவரே மந்திரி பெசார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோம்பாக் நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அஸ்மின் அலி உலு கிளாங் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எங்கும் எழுந்துள்ளது. அப்படியே அவரும் வெற்றி பெற்று, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியும் சிலாங்கூரைக் கைப்பற்றினால் – அவரே மந்திரி பெசாராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

1999-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் உலு கிளாங் தொகுதியில் அஸ்மின் அலி முதன் முறையாக வெற்றி பெற்றார். 2008 முதல் புக்கிட் அந்தாராபாங்சா தொகுதிக்கு மாறிப் போட்டியிட்டார். கடந்த பொதுத் தேர்தலில் புக்கிட் அந்தாபாங்சா தொகுதியில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இந்த இரு வேட்பாளர்களுமே தத்தம் வாக்குச் சாவடிகளுக்கு இன்று காலை வந்து வாக்களித்தனர்.