Home நாடு சிலாங்கூருக்கு புதிய மந்திரி பெசாரா? அமிருடின் ஷாரி அமைச்சராகலாம்!

சிலாங்கூருக்கு புதிய மந்திரி பெசாரா? அமிருடின் ஷாரி அமைச்சராகலாம்!

374
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் அமைச்சரவை மாற்றங்கள் குறித்து பல்வேறு ஆரூடங்கள் எழுந்துள்ளன.

அதில் ஒன்று சிலாங்கூர் மாநிலத்தில் நடப்பு மந்திரி பெசாரான அமிருடின் ஷாரி மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என்பது. கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் 15-வது பொதுத் தேர்தலில் அமிருடின் ஷாரி வெற்றி பெற்றார். சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் சிலாங்கூர் மந்திரி பெசாரானார்.

அமிருடின் ஷாரி மத்திய அமைச்சரானால், அவருக்குப் பதிலாக புதிதாக சிலாங்கூர் மந்திரி பெசாராக நியமனம் பெறப் போகும் பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் யார் என்ற பரபரப்பும் பிகேஆர் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.