Home One Line P2 மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர வேண்டும்

மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர வேண்டும்

674
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கொவிட்19 இரண்டாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழக அரசின் மருத்துவ வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி, “கொவிட்19 தாக்கம் குறைந்து வருவதால் மக்கள் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. கொவிட்19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் புறக்கணிக்க கூடாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்” என்று வலியுத்தினார்.

இந்தியாவில் கொவிட்19 பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டாலும், அதன் தாக்கம் குறைந்த பாடில்லை. இந்தியாவில், மட்டும் இதுவரை மூன்று விதமான தன்மை கொண்ட கொவிட்19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தொடர்ந்து பேசிய மோடி, கொவிட்19 பாதிப்பு குறைந்தாலும், ஆபத்து இன்னமும் முழுமையாக நீங்கவில்லை என சுட்டிக்காட்டினார். பல நாடுகளில் கொவிட்19 இரண்டாவது அலை பரவத் தொடங்கி உள்ளதாகவும், எனவே, நாட்டு மக்கள் அனைவரும் கவனத்துடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்தடுத்து வர இருக்கும் பண்டிகைகளை மிதமான முறையில், பாதுகாப்பாக கொண்டாடும்படியும் மோடி மக்களைக் கேட்டுக் கொண்டார்.