Home One Line P1 தேர்தலில் வென்றதோடு சரி, சபாவை மறந்துவிடாதீர்கள்!- நஜிப்

தேர்தலில் வென்றதோடு சரி, சபாவை மறந்துவிடாதீர்கள்!- நஜிப்

592
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பந்துவான் பிரிஹாதின் நேஷனல் உதவித் திட்டத்திற்கு தகுதி பெற்ற சபா மக்களுக்கு கூடுதலாக 1,000 ரிங்கிட் வழங்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறினார்.

கொவிட் -19 தொற்றுநோயின் தாக்கம் காரணமாக மாநிலத்தில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தி உள்ளதால், தனது அழைப்பிற்கு செவிசாய்க்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

“மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான சம்பவங்கள் இருப்பதால் நடமாட்டக் கட்டுப்பாடுகள் தொடரும் என்று தெரிகிறது. மேலும், தேவைப்படுபவர்கள் வேலை செய்வதற்கான பயணக் கட்டுப்பாடுகளை மீற நிர்பந்திக்கப்படுவார்கள்.

#TamilSchoolmychoice

“இதன் மூலம், சபாவில் கொவிட் -19 பரவுவது நிறுத்தப்படாது. மேலும் நாடு தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான சம்பவங்களை பதிவு செய்யும்” என்று நஜிப் இன்று தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக, நாட்டின் கொவிட் -19 சம்பவங்கள், பெரும்பாலானவை சபாவில் கண்டறியப்பட்டுள்ளன.

சபாவின் வறுமை விகிதம் – “இது ஏற்கனவே நாட்டில் மிக மோசமானது”, இது மேலும் அதிகரிக்கும் என்று நஜிப் கூறினார்.

அரசு மாநிலத்திற்கு கூடுதல் உதவிகளை வழங்காவிட்டால் சபாவிற்கும் பிற மாநிலங்களுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளி விரிவடையும் என்றும் அவர் கணித்தார்.

சபாவில் ஒவ்வொரு பிபிஎன் பெறுநர்களுக்கும் கூடுதல் 1,000 ரிங்கிட் வழங்க 737 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று நஜிப் கூறினார். இது கடந்த மாதம் சரவாகிற்கு செலுத்தப்பட்ட 2.9 பில்லியன் ரிங்கிட் பெட்ரோலிய விற்பனை வரியை விட மிகக் குறைவு.

“இந்த 737 மில்லியனுக்கான செலவை பெட்ரோலிய விற்பனை வரி வடிவில் ஏற்குமாறு தேசிய கூட்டணி அரசாங்கம் விரும்பவில்லை என்றால், அரசாங்கத்திற்கு அதன் சொத்துக்களை விற்க விரும்பவில்லை என்றால் கடன் வாங்க நிறைய இடம் உள்ளது.

“எனவே, கூடுதல் 1,000 ரிங்கிட் செலுத்தி, முழு சபாவிற்கும் கடன் தள்ளுபடியை இன்னும் மூன்று மாதங்களாவது நீட்டிக்கவும்,” என்று அவர் கூறினார்.

“மாநிலம் முழுவதும் தற்போதைய கட்டுப்பாட்டு சூழ்நிலையில், சபா மக்கள் தங்கள் மாத கடன் தவணைகளை எவ்வாறு செலுத்த முடியும்?

“மாநிலத் தேர்தலில் வென்றதோடு சரி, அதன் பிறகு சபாவை மறந்துவிடாதீர்கள்.”என்று அவர் குறிப்பிட்டார்.