Home Featured நாடு “ஆடம்பர வாழ்க்கை முறையும் ஊழலுக்கான ஆதாரம் தான்” – மகாதீர் கருத்து!

“ஆடம்பர வாழ்க்கை முறையும் ஊழலுக்கான ஆதாரம் தான்” – மகாதீர் கருத்து!

588
0
SHARE
Ad

mahathirகோலாலம்பூர் – அரசியல் பிரமுகரோ அல்லது மூத்த அதிகாரியோ ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தால், அதை அவர்கள் ஊழல் புரிந்ததற்கான அடிப்படை காரணமாகக் கருதலாம் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

ஊழல் புரிந்திருக்கலாம் என ஒருவர் மீது சந்தேகம் எழுமானால், அவரது ஆடம்பர வாழ்க்கை முறையே அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள போதுமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

“ஆடம்பர வாழ்க்கை முறையை ஓர் ஆதாரமாக சட்டம் ஏற்றுக் கொள்வதில்லை. பெரிய மனிதர்கள் எனக் கருதப்படுபவர்கள் எப்போதுமே தங்களது ஊழல் நடவடிக்கைகளை மறைத்துவிட முடிகிறது. ஏனெனில் மற்றவர்கள் எதிர்கொள்ளும் சட்ட விதிமுறைகளுக்கு அவர்கள் உட்படுத்தப்படுவதில்லை.

#TamilSchoolmychoice

“எனவே உயர்மட்ட அளவில் நடைபெறும் ஊழல்களைக் கண்டுபிடிக்க, ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய வேண்டியுள்ளது. அவரிடம் பெரிய கார், பெரிய வீடு உள்ளதாக எனப் பார்க்க வேண்டும். ஊழல்வாதிகள் தாங்கள் செய்த ஊழல்களின் வழி பெற்ற பணத்தை செலவிட்டே ஆக வேண்டும். ஏனெனில் பணத்தைப் பூட்டி வைத்தார்கள் எனில், ஒரு கட்டத்தில் அவர்கள் இறக்க நேரிடும். பிறகு பணம் இருந்தும் என்ன பயன்?” என்று மகாதீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழலைத் தடுப்பதற்கென அமைக்கப்படும் அரசு முகைமையங்கள் பலவும் உயர்மட்ட அளவில் உள்ள தலைவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சில நாடுகளில் இத்தகைய பிரச்சினை இருப்பதாகக் கூறியுள்ளார்.