Home Featured நாடு “சினிமாவில் வருவது போல் இருந்தது” – காராக் நிலச்சரிவைப் பார்த்தவர் தகவல்!

“சினிமாவில் வருவது போல் இருந்தது” – காராக் நிலச்சரிவைப் பார்த்தவர் தகவல்!

573
0
SHARE
Ad

Karakகோலாலம்பூர் – “சினிமாவில் வருவது போல் அந்தக் காட்சி இருந்தது” என காராக் நெடுஞ்சாலை நிலச்சரிவை நேரில் கண்டவர் விவரித்துள்ளார்.

நைம்ரான் யூனோஸ் (37) என்பவர் நேற்று தனது மினி கூப்பர் காரில் தனது 62 வயதான தந்தையுடன் சென்று கொண்டிருந்த போது, தனக்கு முன் சென்ற கனரக வாகனம் ஒன்று சாலையிலிருந்து விலகிச் சென்றதைக் கண்டுள்ளார்.

மழையின் காரணமாக அது சாலையை விட்டு சரிக்கிக் கொண்டு செல்வதாக நினைத்த நொடியில் வலது பக்க மலையில் இருந்து மிகப் பெரிய அளவிலான மண் சரிந்து விழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

உடனடியாக தனது தந்தையுடன் காரை விட்டு அவசர அவசரமாக இறங்கிய அவர், அங்கிருந்து நகர்ந்துள்ளார்.

நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில், அங்கு தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.