Home Featured நாடு அஸ்ட்ரோ வானவில்லில் மோடி உரையை நேரலையில் கண்டுகளிக்கலாம்!

அஸ்ட்ரோ வானவில்லில் மோடி உரையை நேரலையில் கண்டுகளிக்கலாம்!

573
0
SHARE
Ad

Narendra-Modi2கோலாலம்பூர் – நாளை காலை கோலாலம்பூருக்கு வருகை புரியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மூன்று நாட்களுக்கு தலைநகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கேற்கவுள்ளார்.

அந்த வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங் பகுதியிலுள்ள, இராமகிருஷ்ண ஆசிரம வளாகத்தில் சுவாமி விவேகானந்தரின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைப்பார்.

அதன் பிறகு மைன்ஸ் கண்காட்சி மண்டபத்தில் ஏற்பாடு செய்திருக்கும் இந்திய வம்சாவளியினருடனான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிகழ்வின் நேரலை மாலை 6 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில்லில் (அலைவரிசை 201) ஒளியேறவுள்ளது.

அடுத்ததாக, வரும் திங்கட்கிழமை (23 நவம்பர்) பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா வட்டாரத்திற்கு வருகை தரும் மோடி, புதிதாக கட்டி முடித்திருக்கும் தோரண வாயிலை அதிகாரபூர்வமாக திறந்து வைக்க உள்ளார்.

இதன் நேரடி ஒளிபரப்பை திங்கட்கிழமை மதியம் 12 மணிக்கு அஸ்ட்ரோ வானவில்லில் (அலைவரிசை 201) கண்டு ரசிக்கலாம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலேசியா வருகையை முன்னிட்டு மலேசியாவின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்களிப்பு எனும் சிறப்பு விளக்கப்படமும் அவரின் வருகை பற்றிய சிறப்பு தொகுப்புகளும் அஸ்ட்ரோ அலைவரிசைகளில் இடம்பெறவுள்ளது. ஆகவே தொடர்ந்து அஸ்ட்ரோவோடு இணைந்திருங்கள்.