மும்பை – பாலிவுட் நடிகை ராணிமுகர்ஜிக்கு இன்று காலையில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவன தலைவரான ஆதித்யா சோப்ராவுடன், கடந்த வருடம் ஏப்ரலில் ராணிமுகர்ஜிக்கு திருமணம் நடந்தது. 37 வயதான ராணி, கடந்த சில நாட்களாகவே மருத்துவ கண்காணிப்பில் இருந்துவந்தார்.
இந்நிலையில் அவர் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு ‘ஆதிரா’ என்று பெயர் சூட்டி உள்ளனர். மருத்துவமனையில் குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.