Home கலை உலகம் ராணி முகர்ஜிக்கு பிப்ரவரி மாதம் திருமணம்

ராணி முகர்ஜிக்கு பிப்ரவரி மாதம் திருமணம்

475
0
SHARE
Ad

rani-aiyyaa-382

புது டெல்லி, ஜனவரி 2 – இந்தி நடிகை ராணி முகர்ஜியும், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. இவர்கள் திருமணம் எப்போது நடக்கும் என்று இந்தி பட உலகினர் பரபரப்போடு எதிர்பார்க்கிறார்கள். தற்போது திருமண தேதி முடிவாகியுள்ளது.

#TamilSchoolmychoice

பிப்ரவரி மாதம் 10-ந் தேதி திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. முகூர்த்தம் ஜோத்பூரில் உள்ள உமைத்பவன் மாளிகையில் நடக்கிறது. இரண்டு வாரங்கள் திருமண சடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

திருமணத்தை உறவினர்களை மட்டுமே அழைத்து ரகசியமாக நடத்த முடிவு செய்துள்ளாகளாம். இந்தி நடிகர், நடிகைகளில் நெருக்கமான சிலரை மட்டுமே அழைக்க திட்டமிட்டு உள்ளனர்.